விஜயராகவ பெருமாள் கோவிலில் திருவிழா
ADDED :1257 days ago
பள்ளிப்பட்டு, ஈச்சம்பாடி விஜயராகவ பெருமாள் கோவில் திருவிழா, இன்று நடக்கிறது. பள்ளிப்பட்டு அடுத்த ஈச்சம்பாடி கிராமத்தில் உள்ளது, விஜயராகவ பெருமாள் கோவில். ஈச்சம்பாடியை பூர்வீகமாக கொண்டவர்கள், 2017ல் இந்த கோவிலை பழமை மாறாமல் புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்தினர்.தொடர்ந்து நித்திய பூஜை, புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மார்கழி மாத உற்சவங்கள் நடந்து வருகின்றன. கும்பாபிஷேகம் நடந்து ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றுவதை ஒட்டி, இன்று காலை 8:30 மணிக்கு, மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது.மதியம் 12:00 மணிக்கு திருமஞ்சனம் நடைபெறும். மாலை 4:00 மணிக்கு உற்சவர் வீதியுலா எழுந்தருளுகிறார்.