உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்தலக்குண்டு மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம்

வத்தலக்குண்டு மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம்

வத்தலக்குண்டு: பழைய வத்தலக்குண்டு மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.

மே 3ல் கம்பம் நடப்பட்டு 10 முதல் மண்டகப்படிகளில் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மே 17 விழா துவங்கி 18, 19ல் அக்கினிச்சட்டி, மாவிளக்கு, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்று இரவு அம்மன் பூப்பல்லக்கில் பவனி வந்தார். நேற்று முன்தினம் பால்காவடி, திருமஞ்சனக் குடம், பால்குட அபிஷேகங்கள் நடந்தன. அம்மன் மின் அலங்கார சப்பரத்தில் நகர்வலம் வந்தார். நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலை செல்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !