உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம்

முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம்

புதுச்சேரி, புதுச்சேரி அடுத்த முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தெப்பல்உற்சவத்தில் அர்ஜுனன் திரவுபதை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் பிரமோற்சவ விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், இரவில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. விழாவில் நடந்த தெப்பல்உற்சவத்தில் அர்ஜுனன் திரவுபதை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஊஞ்சல் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !