காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை
ADDED :1552 days ago
நெல்லிக்குப்பம் : திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் ஆனந்த காலபைரவருக்கு தனி சன்னதி உள்ளது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் அருள்பாலித்தார். உற்சவர் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். பூஜைகளை சேனாபதி குருக்கள் செய்தார். கைலாசநாதர் கோவிலி லும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.