உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் மாலை 5:00 மணிக்கு தீபம் ஏற்றப்படும் : நீதிபதிகள் அறிவிப்பு

திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் மாலை 5:00 மணிக்கு தீபம் ஏற்றப்படும் : நீதிபதிகள் அறிவிப்பு

திருப்பரங்குன்றம்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் இன்று மாலை 5:00 மணிக்கு தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுகிறது. 


திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நவ., 24ல் திருக்கார்த்திகையன்று தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் ஏற்றப்படவில்லை. ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் கோவில் நிர்வாகத்தை கவனிக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகிய இருவரும் மதுரை விமான நிலையத்தை வந்தடைந்தனர். தீபம் ஏற்றுவது குறித்து, பட்டர்கள், கோவில் நிர்வாகத்துடன் ஆலோசித்தனர்.  ஓய்வு பெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன், மதுரை மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்டோர் கோவிலுக்கு வருகை தந்தனர். பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் மலர் தூவி வரவேற்றனர். ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு பட்டர்கள் மாலை அணிவித்து மரியாதை அளித்தனர்.தீபம் ஏற்றுவதற்கான பொருட்களை தீபத் தூண் பகுதிக்கு வழியனுப்பி வைத்த ஓய்வு பெற்ற  நீதிபதிகள் மாலை 5:00 மணிக்கு தீபம் ஏற்றப்படும் என தெரிவித்து விட்டு புறப்பட்டுச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !