/
கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கான மண் கலயம், திரி, நெய் தயார்!
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கான மண் கலயம், திரி, நெய் தயார்!
ADDED :1 minutes ago
திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கான மண் கலயம், திரி, நெய் உள்ளிட்ட பொருட்களை அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் ஜெயராமன், அழகர்கோயில் இணை கமிஷனர் பொன்சுவாமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோவிலுக்குள் பூஜைக்காக கொண்டு சென்றனர். ஓய்வு பெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன், மதுரை மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்டோர் கோவிலுக்கு வருகை தந்தனர். பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் மலர் தூவி வரவேற்றனர். ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு பட்டர்கள் மாலை அணிவித்து மரியாதை அளித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சி.ஆர்.பி.எப்., ஐ.ஜி., விக்ரம் பார்வையிட்டார். முருக பக்தர்கள், ஹிந்து அமைப்பினர் உற்சாகத்தில் உள்ளனர். தீபத்தூணில் கார்த்திகை தீபம் காண காத்திருக்கின்றனர். –நமது நிருபர்–