உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகன் கோவிலில் சுவாமி கண் திறந்ததாக பரபரப்பு: மக்கள் திரண்டனர்

முருகன் கோவிலில் சுவாமி கண் திறந்ததாக பரபரப்பு: மக்கள் திரண்டனர்

விழுப்புரம்: விழுப்புரத்தில் முருகர் கோவிலில் சுவாமி கண் திறந்ததாக பக்தர்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் மகாராஜபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே தீய்ப்பாய்ந்தம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில், முருகருக்கு சிலை வைக்கப்பட்டு தனி சன்னதியும் உள்ளது. நேற்று இரவு 9:00 மணிக்கு, கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பெண்கள் சிலர் அந்த முருகன் சன்னதியில் உள்ள முருகர் கண் விழித்துப் பார்த்தார் என கூறியதால், சுற்றுப்பகுதியில் தகவல் பரவியது.தற்போது கோவிலில், கார்த்திகை தீபத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்து வரும் நிலையில், நேற்று இரவு கோவிலில் பக்தி பாடல் பாடிய ஒரு பெண், முருகன் சிலையின் ஒரு கண் திறந்தபடி பார்த்தார் என பக்தி பரவசத்துடன் குறிப்பிட்டார்.இதனையடுத்து அந்த பகுதி மக்கள் திரண்டு சென்று, முருகர் சிலையின் கண் திறந்து மூடினார் என கூறி, வியந்து பார்வையிட்டு வழிபட்டனர். கண் திறந்த நிலையில், முருகர் காட்சியளித்ததாக பக்தர்கள் நம்பிக்கையுடன் வியந்து பார்வையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !