விநாயகரைச் சுற்றினால் கல்யாண வரம் கிடைக்கிறதே...ஏன் தெரியுமா?
ADDED :1376 days ago
பிரம்மச்சாரியான விநாயகரைச் சுற்றினால் கல்யாண வரம் கிடைக்கிறதே...ஏன் தெரியுமா?
வள்ளியை திருமணம் புரியும் முயற்சியில் ஈடுபட்ட முருகப்பெருமானுக்கு நல்ல முடிவு கிடைக்கவில்லை. கடைசியில் அண்ணனான விநாயகரின் உதவியை நாட, அவர் யானை வடிவில் தோன்றினார். அதைக் கண்டதும் பயந்த வள்ளி, தன் அருகில் வேடன் வடிவில் நின்றிருந்த முருகனைத் தழுவினாள். இருவருக்கும் காதல் மலர அது கல்யாணத்தில் முடிந்தது. தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது என நினைப்பவர்களே உலகில் அதிகம். ஆனால் பிரம்மச்சாரியான விநாயகரோ தன்னைச் சரணடைந்தவருக்கு கல்யாண வரம் கொடுத்து மகிழ்கிறார்.