அசோக்நகர் பகவதி அம்மன் கோயில் விழாவில் இன்று பால்குட ஊர்வலம்
ADDED :1570 days ago
நத்தம், :நத்தம் அசோக்நகர் பகவதி அம்மன் கோயில் திருவிழா மே 16 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கணபதி ஹோமம், லட்ச அர்ச்சனை நட்நதது.இதை தொடர்ந்து பக்தர்களால் கரந்தமலை சென்று தீர்த்தம் எடுத்து வந்து சந்தன கருப்பசாமி கோயிலில் இருந்து அம்மன் அழைத்து வரப்பட்டு ,அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. பின் பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மே 20ல் நத்தம் ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.வி.என்., கண்ணன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 108 திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது. இன்று பால்குடம், சந்தன குடம், முளைப்பாரி, அக்னிச்சட்டி, வானவேடிக்கையுடன் மின் அலங்காரத்தில் அம்மன் நகர்வலம் வருதல் நடக்கிறது.