சுந்தர விநாயகர் கோவிலில் வருஷாபிஷேக விழா
ADDED :1274 days ago
மானாமதுரை: மானாமதுரை சுந்தரபுரம் அக்ரஹார தெருவில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு கோயிலில் கலச நீர் வைத்து யாகம் நடத்தப்பட்டு பூர்ணாகுதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.வருஷாபிஷேக விழாவில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் ராஜேந்திரபிரசாத்,தமிழரசி ஆகியோர் செய்து இருந்தனர்.