உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று சர்ப்பபலி பூஜை

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று சர்ப்பபலி பூஜை

திருவட்டார் : திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று (25ம் தேதி) சர்ப்பபலி பூஜை நடைபெறுகிறது.

திருவட்டார், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற திருவட்டார்  ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் தேவபிரசன்னம் பார்க்கப்பட்ட போது கும்பாபிஷேகத்துக்கு முன்பு பல்வேறு பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என கூறப்பட்டது. அதன்படி கடந்த 8 மாதங்களாக மாதம் ஒருமுறை கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம் ஆகியவை நடந்து வருகிறது. இன்று மாலை சர்ப்பபலி பூஜை நடைபெற உள்ளது. இந்த பூஜையை கேரளா மாநிலம் மன்னார் சாலை சுப்பிரமணியன் நம்பூதிரி நடத்துகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !