காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்
ADDED :1278 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் விடையாற்றி உற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று மாலை, புஷ்ப பல்லக்கு உற்சவம் நடக்கிறது.
இரு உற்சவத்திலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கடந்த, 22ல் இரவு வெட்டிவேர் சப்பரத்துடன் கொடி இறக்கப்பட்டு, வைகாசி பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.தொடர்ந்து, மூன்று நாட்கள் நடைபெறும் விடையாற்றி உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. கடந்த இரு நாட்களாக விடையாற்றி உற்சவத்தையொட்டி பெருமாள் திருவடிகோவில் புறப்பாடு நடந்தது. இதில் காலை, 11:00 மணிக்கு, நுாறுகால் மண்டபத்தில் எழுந்தருளிய பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், திருமஞ்சனம் நடந்தன. விடையாற்றி உற்சவத்தின் நிறைவு நாளான இன்று மாலை 6:30 மணிக்கு புஷ்ப பல்லக்கு உற்சவம் நடைபெறுகிறது.இதில், பல வகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளும் வரதராஜ பெருமாள், சன்னதி தெரு, குறுக்கு தெரு, அண்ணா தெரு, நான்கு மாட வீதி, ஆணை கட்டி தெரு வழியாக வீதியுலா சென்று மீண்டும் சன்னதி வந்தடைகிறார்.