உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோலையம்மாள் கோவிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்

சோலையம்மாள் கோவிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், கோவிலாங்குளம் கிராமத்தில் அருள்புரியும் சோலையம்மாள் கோவிலில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் வரும் 10 தேதி (10.06.22) வெள்ளி கிழமை நடைபெறுகிறது. விழாவில் வரும் 9ம் தேதி மாலை 5.00 மணிமுதல் இரவு 9.00 மணி வரை  விநாயகர் பூஜை, புண்யாக வாஜனம், தீர்த்தம் அழைத்தல், வாஸ்து சாந்தி, சுமங்கலி பூஜை, கன்னிகா பூஜை, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், மகா பூர்ணாகுதி நடைபெறுகிறது. தொடர்ந்து 10ம் தேதி வெள்ளிகிழமை காலை 4.30 மணி முதல் 7.20 மணி வரை கணபதி பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், ருத்ரபாராயணம், சோலையம்மன் ஹோமம், பூர்ணாகுதி, கடம் புறப்பாடு மற்றும் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 8.30 மணி முதல் அன்னதானம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !