வளையல் அலங்காரத்தில் பகவதி அம்மன் : மாவிளக்குடன் சிறப்பு பூஜை
ADDED :1224 days ago
எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே உள்ள நவலடிப்பட்டி பகவதியம்மன், அங்கண்ணன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இந்த தேர் திருவிழாவையொட்டி, தீர்த்தக்குடம், பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் பங்கேற்று தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து வந்த நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து பகவதியம்மனுக்கு நேற்று மாலை, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின் மாவிளக்குடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர்.