போத்தனூர் பண்ணாரி மாரியம்மன் கோவில் விழா
ADDED :1375 days ago
போத்தனூர்: போத்தனூர் போலீஸ் ஸ்டேஷன் அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலின், 60ம் ஆண்டு பூச்சாட்டு விழா கடந்த, 24ல் கணபதி ஹோமம், அக்னி கம்பம் நடுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை மாவிளக்கு வழிபாடு, பூவோடு எடுத்து வருதல், அம்மன் சக்தி கரகம் அழைத்து வருதலும் நடந்தன. தொடர்ந்து இரவு, 10:30 மணிக்கு மேல் பூக்குழி (அக்னி குண்டம்) இறங்குதல் நடந்தது; திரளானோர் பங்கேற்றனர். நேற்று மாலை அம்மன் ஊர்வலம் நடந்தது. இன்று மதியம் அம்மனுக்கு மகா அபிஷேகமும் தொடர்ந்து பிரசாதம் வழங்குதலும் நடக்கின்றன.