குரு காசிவிசுவநாதர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1242 days ago
வத்தலக்குண்டு: திருநகர் குருகாசிவிசுவநாதர் கோயில் கும்பாபிஷேகம் யாக பூஜையுடன் துவங்கியது. முதல் நாளன்று விநாயகர் பூஜை, கோபூஜை, காவல் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. லட்சுமி, நவக்கிரக, துர்கா ஹோமம் நடந்தது. வாஸ்து சாந்தி, பூர்ணாஹூதி நடந்தது. இரண்டாம் நாள் மகா சங்கல்பம், புண்யாகவாசனம், பஞ்சகவிய சம்மேளனம், தீபாரதனை நடந்தது. நேற்று காலை கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஆனந்த் குழுவினர் கும்பாபிஷேகம் நடத்தினர் கோயில் அர்ச்சகர் ரகு ஏற்பாடுகளை செய்திருந்தார். அன்னதானம் நடந்தது.