கூட்டு வழிபாடு
ADDED :4853 days ago
சேலம்: சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில், இன்று மாலை 4.30 மணிக்கு ஏகதின லட்சம் போற்றிகள் என்ற கூட்டு வழிபாடு நடக்கிறது. இதில், ஒருவர் 1,404 போற்றிகள் வீதம், 108 பேர் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 632 இறையாற்றல் போற்றிகள் சொல்லி வழிபடுகின்றனர். தமிழில் லட்சம் போற்றிகளை சொல்லும் இம்மாதிரியான கூட்டு வழிபாட்டை சேலத்தில் முதல் முறையாக இக்கோவிலில் நடத்தப்படவுள்ளது. மாலை 4.30 முதல் இரவு 8.30 மணி வரை இறையாற்றல் போற்றி நிகழ்ச்சி நடக்கிறது.