உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோவிலில் பூணூல் விழா

அம்மன் கோவிலில் பூணூல் விழா

சேலம்: சேலம், மூணாங்கரடு ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், பூணூல் விழா கொண்டாடப்பட்டது.சேலம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், சென்றாய பெருமாள் சாஸ்திரி தலைமையில் பூணூல் விழா நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு மேல் புண்யாஹவாசனம், கலசபூஜை, கணபதி ஹோமம், காயத்ரி ஹோமம் நடந்தது. காலை 9 மணிக்கு மேல் பூர்ணாஹூதி செய்து பூணூல் அணியப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தளிகை பூஜையும், தீபாராதனையும்  நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !