வேப்பமர வாகனத்தில் மாவடியான் ராமசாமி, மாரியம்மன் வீதி உலா
ADDED :1257 days ago
கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு வேப்பமர வாகனத்தில் மாவடியான் ராமசாமியும், மாரியம்மனும் திருவீதிஉலா வந்தனர்.
பிரசித்தி பெற்ற, மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த, 8ல் கம்பம் நடுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து வரும், 13ல் பூச்சொரிதல் விழா, 15ல் காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. பின், நாள்தோறும் பல்வேறு விசேஷ வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது. திருவிழாவை முன்னிட்டு வெப்பமர வாகனத்தில் மாவடியான் ராமசாமியும், மாரியம்மனும் திருவீதிஉலா வந்தனர். நாளை 2ல் பஞ்ச பிரகாரம், 3ல் புஷ்ப பல்லக்கு, 4ல் ஊஞ்சல் உற்சவம், 5ல் அம்மன் குடிபுகுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடக்கிறது.