சக்கரத்தாழ்வார் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :1552 days ago
அலங்காநல்லூர்: கோட்டைமேடு சுதர்ஸன சங்கு சக்கரத்தாழ்வார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மே 30 யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. இன்று காலை 4ம் கால பூஜையை தொடர்ந்து பாலாஜி பட்டர் தலைமையில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.