உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் சிறுவர்களுக்கான பண்புப் பயிற்சி நிறைவு

தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் சிறுவர்களுக்கான பண்புப் பயிற்சி நிறைவு

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் பல வருடங்களாக நன்கு சேவையாற்றி வரும் ராமகிருஷ்ண- விவேகானந்த டிரஸ்ட் மூலம் சிறுவர்களுக்கான புத்துணர்வு முகாம் கடந்த 20 நாட்களாக நடைபெற்றது. 40 குழந்தைகள் கலந்துகொண்ட முகாமின் நிறைவு விழாவில் சுவாமி விமூர்த்தானந்தர் குழந்தைகளுக்குப் பண்புப் பயிற்சியும் பரிசுகளையும் வழங்கினார். ஜி. வெங்கட்ராமன் மற்றும் அவரது குழுவினர் இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !