ரமணகிரி ஆசிரமத்தில் 67வது குருபூஜை விழா : திருவாசகம் முற்றோதல்
ADDED :1259 days ago
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி சிறுமலை அடிவாரத்தில் உள்ள சுவாமி ரமணகிரி ஆசிரமத்தில் 67வது குருபூஜை விழா நடந்தது. இதை முன்னிட்டு மதுரை திருப்பாச்சி திருவாசக பெருந்தகை சிவ கேசவன் திருவாசகம் முற்றோதல் நிகழ்த்தினார். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சிவபெருமானின் பாடல்களை பாடி அதன் பொருளை விளக்கினர். சிவனடியார்கள், சிவ பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகத்தினர் செய்திருந்தனர். சோழவந்தான் ஆர்.எம்.எஸ்.,காலனி சீதாலட்சுமி ஞானாலயத்தில் குரு பூஜை விழா நடந்தது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய சைவ சித்தாந்த சபை சிவ ஞானாபிஷேகம் குழுவினர் திருவாசக முற்றோதல் நிகழ்த்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.