100 ஆண்டுகளுக்கு பின் அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா
ADDED :1223 days ago
சோழவந்தான்: சோழவந்தான் அருகே கீழமாத்துரரில் செவிடு தீர்த்த அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா 100 ஆண்டுகளுக்குப் பின் நடந்தது. முனியாண்டி சுவாமி, அங்காளபரமேஸ்வரி, மந்தை காளியம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மே 31 சுள்ள கரையான் முனியாண்டி கோயிலில் இருந்து அய்யனார், கருப்புசாமி குதிரை எடுக்கப்பட்டு அம்மச்சியார் அம்மன் கோயில் வந்தனர். பெண்கள் மாவிளக்கு எடுத்துனர். நேற்று காலை அய்யனார் கோயிலுக்கு சென்று சக்தி கிடா வெட்டி வழிபட்டனர். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்தனர்.