உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாபலி வானாதிராயர் கால எல்லைக்கல் கண்டுபிடிப்பு

மகாபலி வானாதிராயர் கால எல்லைக்கல் கண்டுபிடிப்பு

மதுரை, மதுரை வடபழஞ்சி கிராமத்தில் 500 ஆண்டுகளுக்கு முந்தைய மகாபலி வானாதிராயர் கால கோயில் எல்லைக்கல் ஒன்றை மதுரை வரலாற்று ஆர்வலர் அறிவுச்செல்வம், கோயில் கட்டடக் கலை, சிற்பத்துறை ஆய்வாளர் தேவி கண்டுபிடித்தனர். அவர்கள் கூறியதாவது: வடபழஞ்சி பாண்டி விநாயகர் கோயில் முன் உள்ள கல் குறித்து வரலாற்று ஆர்வலர் ராமகிருஷ்ணன் தந்த தகவலின் பேரில் ஆய்வு செய்தோம். 175 செ.மீ., உயரம், ஒருஅடி நீளம், அகலம் கொண்டசெவ்வக வடிவ கல்லில் 21 வரிகள் தமிழில் வெட்டப்பட்டுள்ளது.


இக்கல்வெட்டு கி.பி., 15ம் நூற்றாண்டை சேர்ந்தது. 500 ஆண்டுகளுக்கு முந்தையது எனகண்டறிந்தோம். இக்கிராமம் மகாபலி வானாதிராயர் காலத்தில் சர்வ மானியமாக கொடுக்கப்பட்டதாக கல்வெட்டு செய்தி சொல்கிறது. இக்கல்லின் மேற்புறம் சூலமும், கீழே வாயில் பாம்பை கவ்விய மயில் உருவமும்செதுக்கப்பட்டுள்ளது. எனவே, இதனை முருகன் கோயிலுக்குரியஎல்லைக் கல்லாக கருதலாம். மூத்த தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் இக்கல்வெட்டில் உள்ள செய்தியை வாசித்து உரிய விளக்கம் அளித்து உதவினார், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !