நெல்லையில் நாளை ராகவேந்திரரின் 341வது ஆராதனை விழா
ADDED :4854 days ago
திருநெல்வேலி : நெல்லை டவுனில் ராகவேந்திரரின் 341வது ஆராதனை விழா நாளை(4ம் தேதி)நடக்கிறது. நெல்லை டவுன் பெருமாள் தெற்கு ரதவீதியில் உள்ள அனுமார் கோயிலில் ராகவேந்திரரின் 341வது ஆராதனை விழா நாளை(4ம் தேதி) நடக்கிறது. இதைமுன்னிட்டு காலை 9 மணிக்கு ஹரிவாயு துதி பாராயணம், விஷ்ணுசகஸ்ரநாம பாராயணம், ராகவேந்திரர் பற்றிய உபன்யாசம் நடக்கிறது. தொடர்ந்து மதியம் ஒரு மணிக்கு நாமசங்கீர்த்தனம், அபிஷேகம்,ஆராதனை மற்றும் மங்கள ஆரத்தி நடக்கிறது. மாலை 6 மணிக்கு நாமசங்கீர்த்தனம், மங்கள ஆரத்தி நடக்கிறது. உலக நன்மை, மழைவேண்டி நடைபெறும் இந்த ராகவேந்திரரின் ஆராதனை விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொள்ளுமாறு குருராகவேந்திரா டிரஸ்ட் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.