முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1339 days ago
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உஞ்சனையில் உள்ள மிக பழமையான மதகு முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பால்பழக்காரி அம்மன், சோனைஅய்யா உட்பட பரிவார சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தன. முன்னதாக கணேசகுருக்கள் தலைமையில் கணபதி பூஜை, லட்சுமி பூஜை உட்பட இரண்டு கால யாக பூஜைகள் நடந்தன ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகம் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.