உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவியூரில் கருப்பணசாமி, சின்ன கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம்

ஆவியூரில் கருப்பணசாமி, சின்ன கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம்

காரியாபட்டி: காரியாபட்டி ஆவியூரில் வடக்குத் தெரு பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட கருப்பணசாமி, சின்ன கருப்பணசாமி கோயில் பல ஆண்டுகளுக்குப் பின் திருப்பணிகள் செய்யப்பட்டு ராஜகோபுரம் அமைக்கப்பட்டது. பரிவார தெய்வங்கள், ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் பூர்ணாஹூதி, தீபாராதனை பிரசாதம் வழங்குதல், விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜை, அஷ்பந்தன மருந்து சாத்துதல், மூலஸ்தானம் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம், மகா தீபாராதனை பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை வடக்குத்தெரு பங்காளிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !