சீதாலட்சுமி ஞானாலயத்தில் குருபூஜை விழா
ADDED :1296 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஆர்.எம்.எஸ்.,காலனி சீதாலட்சுமி ஞானாலயத்தில் குருபூஜை விழா 3 நாட்கள் நடந்தது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சைவ சித்தாந்த சபை சார்பில் திருவாசக முற்றோதல், உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை வழிபாடு செய்தனர். சிறப்பு அபிஷேக ஆராதனையை தொடர்ந்து சீதா பிராட்டியார் பூ சப்பரத்தில் எழுந்தருளினார். ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.