செல்வ விநாயகர், செந்தில் ஆண்டவர் கோயில் வருஷாபிஷேக விழா
ADDED :1447 days ago
அலங்காநல்லூர்: அலங்காநல்லூரில் வியாபாரிகள் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட செல்வ விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், செந்தில் ஆண்டவர் கோயில் வருஷாபிஷேக விழா நடந்தது. யாகசாலை பூஜைகளை தொடர்ந்து மூலவருக்கு பால், சந்தனம்,இளநீர் உள்ளிட்ட மகா அபிஷேக, அலங்கார ஆராதனைகள் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.