நாச்சிகுளத்தில் மத நல்லிணக்க விழா
ADDED :1296 days ago
சோழவந்தான்: சோழவந்தான் அருகே நாச்சிகுளத்தில் கருப்பணசுவாமி, காளியம்மன், பகவதி அம்மன் கோயில் மதநல்லிணக்க விழா நடந்தது. பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்றனர்.நேற்று முன்தினம் இரவு பகவதி அம்மன் கோயில் முன்பிருந்து கருப்பணசுவாமி பூஜாரி அரிவாள் மீது ஏறி கோயிலுக்கு வந்தார். முன்னதாக பல ஆண்டுகளாக தொடரும் கிராம மத நல்லிணக்க வழக்கப்படி தொத்தா ராவுத்தர் குடும்பத்தினர் மேலதாளத்துடன் கொண்டு வந்த பூஜை பொருட்களை வைத்து முதன்மைகாரர்கள் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அனைவருக்கும் விபூதி, பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்தனர்.