அரியாங்குப்பம் சொர்ணா பைரவருக்கு வளர்பிறை அஷ்டமி பூஜை
ADDED :137 days ago
அரியாங்குப்பம்: நாணமேடு சொர்ணா பைவர் கோவிலில் நடந்த, வளர்பிறை அஷ்டமி பூஜையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அரியாங்குப்பம் அடுத்த நாணமேடு பகுதியில் சொர்ணா பைரவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஒவ்வொரு வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி நாளில் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. இன்று வளர்பிறை அஷ்டமியில் சொர்ணா பைரவருக்கு மாலையில் சிறப்பு யாகம் நடந்தது. அதனை தொடர்ந்து, சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்ட பைரவருக்கு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.