உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஞ்சள்விளாகத்தில் கும்பாபிஷேகம் விமரிசை

மஞ்சள்விளாகத்தில் கும்பாபிஷேகம் விமரிசை

கூவத்துார், மஞ்சள்விளாகம் கிராமத்தில் உள்ள ஆகாய கன்னியம்மன், முத்துமாரியம்மன் கோவில்களில், மஹா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.கூவத்துார் அருகே, மஞ்சள்விளாகம் கிராமத்தில் ஆகாய கன்னியம்மன், முத்துமாரியம்மன் கோவில்கள் உள்ளன.கடந்த 12 ஆண்டுகளுக்குப் பின், இந்த கோவில்களில் மஹா கும்பாபிஷேகம் நடத்த, ஓராண்டாக கட்டுமான பணிகள் நடந்து வந்தன.இந்நிலையில், மேற்கண்ட கோவில்களில் நேற்று, காலை 8:20 மணிக்கு கோபுர விமானங்களுக்கும், 8:25 மணிக்கு மூலவர்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மூலவர்களுக்கு தீபாராதனை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !