உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொட்டிபாளையம் விநாயகர் கோவிலில் திருட முயற்சி

தொட்டிபாளையம் விநாயகர் கோவிலில் திருட முயற்சி

சோமனூர்: தொட்டிபாளையம் விநாயகர்.கோவிலில் திருட முயற்சி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சோமனூர் அடுத்த தொட்டிபாளையத்தில், சோமனூர் ரோட்டை ஒட்டி, சித்தி விநாயகர் கோவில் உள்ளது. அருகிலேயே அம்மன் கோவிலும் உள்ளது. இக்கோவிலில் நேற்று இரவு, கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்துள்ளனர். விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லாததால், அங்கிருந்து தப்பி சென்றனர். இன்று காலை வழக்கம்போல் பூஜை செய்ய வந்த பூஜாரி, கோவிலின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தார். கோவில் நிர்வாகிகள் கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதேபோல், கணியூரை சேர்ந்த சாந்தகுமார், 47, வீட்டை பூட்டி விட்டு நாகர்கோவில் சென்றுள்ளார். வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற பீரோவை உடைத்துள்னர். பொருட்கள் எதுவும் இல்லாததால், அங்கிருந்து சென்றுவிட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !