ராமலிங்க பிரதிஷ்டை விழா : ராமேஸ்வரத்தில் ராவணன் சம்ஹாரம்
ADDED :1324 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் துவங்கிய ராமலிங்க பிரதிஷ்டை விழா யொட்டி நேற்று ராமர், ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
ராமாயணம் வரலாற்றில் தொடர்புடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தல வரலாற்றை பக்தர்களுக்கு நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று துவங்கிய ராமலிங்க பிரதிஷ்டை விழா யொட்டி மாலையில் கோயிலில் இருந்து ராமர், சீதை, அனுமான் பல்லக்கில் புறப்பட்டு திட்டக்குடியில் எழுந்தருளினார். பின் அங்கிருந்த ராவணன் மீது ராமர் அம்பு எய்து வதம் செய்யும் நிகழ்ச்சியை கோயில் குருக்கள் நடத்தினர். பின் ராமருக்கு மகா தீபாரதனை நடந்ததும், அங்கிருந்த கோயில் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.