வடபழனி ஆண்டவர் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்
சென்னை: சென்னை வடபழனி ஆண்டவர் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
சென்னை வடபழனி ஆண்டவர் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா விழாவை முன்னிட்டு, தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் சாமி வீதி உலா நடக்கிறது. விழாவில் நேற்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (9ம் தேதி) காலை 7.30 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் வடம் பிடித்து, தரிசனம் செய்து வருகின்றனர். அன்று இரவு 7 மணிக்கு ஒய்யாரி உற்சவம் நடக்கிறது. 11ம் தேதி இரவு 7 மணிக்கு வடபழனி ஆண்டவர் திருவீதி உலா நடக்கிறது. 12ம்தேதி காலை 9 மணிக்கு சண்முகர் வீதி உலாவும், 10 மணிக்கு தீர்த்தவாரியும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. 13ம்தேதி சிறப்பு புஷ்ப பல்லக்கு வீதி உலா நடைபெறுகிறது. அதன்பிறகு 14ம் தேதி முதல் 23ம் தேதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.