உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திட்டமிடாமல் நடைபெற்ற திருமறைநாதர் கோயில் திருவிழா

திட்டமிடாமல் நடைபெற்ற திருமறைநாதர் கோயில் திருவிழா

மேலூர்: திருவாதவூர் திருமறைநாதர் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மேலுாருக்கு எழுந்தருள்வது வழக்கம். இத் திருவிழாவில் பிரியாவிடை, வேதநாயகி அம்பாளுடன் திருமறைநாதர் ஒரு வாகனத்திலும், பரிகார தெய்வங்களான விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் சண்டிகேஸ்வரர் தனித்தனி வாகனங்களில் எழுந்தருள்வர். ஆனால் இந்தாண்டு சுவாமிகளை கொண்டு செல்வதற்கு புதிய வாகனங்கள் இருந்தும் ஒரே வாகனங்களில் விநாயகர், சுப்பிரமணியர் அவர்களின் பின்புறம் சண்டிகேஸ்வரர் சிலைகளை வைத்து சென்றதால் பக்தர்கள் சாமி கும்பிட முடியாததால்அதிருப்தி தெரிவித்தனர். இது குறித்து பேஷ்காரிடம் பக்தர்கள் கேட்ட போது சீர்பாதங்கள் பற்றாக்குறை என்றார். ஆனால் சீர்பாதத்தினர் வண்டிகளை இழுத்து செல்ல மாடுகளை ஏற்பாடு செய்து வைத்ததை வேண்டாம் என கோயில் நிர்வாகத்தினர் மறுத்துவிட்டதாக பதிலுக்கு குற்றம் சுமத்தினர். அதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகிகள் ஒரே வண்டியில் இருந்த சண்டிகேஸ்வரர் சிலையை புதிய வண்டிக்கு அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !