ஒழுகைமங்கலம் சீதளா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
ஒழுகைமங்கலம் சீதளா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஒழுகைமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ சீதளா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றாக திகழும் இந்த திருக்கோவில் அமைந்துள்ளது பரிவார தெய்வங்களாக அய்யனார் பிடாரி அம்மன் சன்னதிகளும் அமைந்துள்ளன இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று காலை 10 மணிக்கு மேல் 11 30க்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 5ஆம் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கப்பட்டு ஏழாம் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது இன்று காலை யாகசாலை நான்காம் கால பூஜைகள் முடிவுற்று பூர்ணாகுதி மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு வேத மந்திரங்கள் ஓத மங்கள வாத்தியங்கள் இசைக்க கோயிலை வலம் வந்து அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களின் விமான கலசங்களை அடைந்தன அதனையடுத்து சிவாச்சாரியார்கள் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன கும்பாபிஷேகத்தை சர்வசாதகம் பாலாஜி சிவாச்சாரியார் தலைமையிலானோர் நடத்தி வைத்தனர் இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகேசன் ஆய்வாளர் பத்ரி நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூன்று டிஎஸ்பிக்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாள் மண்டல அபிஷேகம் நடைபெறுகிறது.