சபரிமலை பிரதிஷ்டை தினத்தில் லட்சார்ச்சனை, களபாபிஷேகம்
சபரிமலை, சபரிமலை பிரதிஷ்டை தினத்தையொட்டி லட்சார்ச்சனை மற்றும் சிறப்பு களபாபிஷேகம் நடைபெற்றது.
பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக நேற்று மாலை நடை திறந்தது. அன்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை நடை திறந்ததும் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு ஐயப்பனுக்கு அபிஷேகம் நடத்தினார். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் தொடங்கியது. ஸ்ரீகோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் லட்சார்ச்சனை நடைபெற்றது. தந்திரி மற்றும் மேல்சாந்தியின் தலைமையில் நடைபெற்ற இந்த அர்ச்சனையில் ஏராளமான பூஜாரிகள் கலந்து கொண்டனர். மதியம் உச்சபூஜைக்கு முன்னோடியாக களபம் பூஜிக்கப்பட்டு பவனியாக எடுத்த வரப்பட்டு ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு படிபூஜை, அத்தாழ பூஜை நடத்தப்பட்டு இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பு. ஆனி மாத பூஜைகளுக்காக 14–ம் தேதி மாலை 5:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கும்.