முள் படுக்கையில் படுத்து ஆசி வழங்கும் சாமியாடி
ADDED :1257 days ago
காரியாபட்டி: காரியாபட்டி வரலொட்டியில் சோனை முத்தையா சுவாமி, கழுவடியான் கருப்பசாமி கோயில் திருவிழா, 8 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்றது. இக்கோயிலின் முக்கிய நிகழ்வாக காரியாபட்டியைச் சேர்ந்த சாமியாடி ராமர் கோயிலைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இலந்தை முள், காக்கா முள் மெத்தையில் 3 முறை படுத்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் பாரம்பரியமாக முள் படுக்கையில் படுத்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகின்றனர். இந்நிகழ்வினை காண அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் வருகை தந்து ஆசி பெற்று சென்றனர்.