உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீட்கப்பட்ட சிலைகள் கோவிலில் ஒப்படைப்பு

மீட்கப்பட்ட சிலைகள் கோவிலில் ஒப்படைப்பு

தஞ்சாவூர்: வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சிலைகளில் மூன்று ஐம்பொன் சிலைகள் நேற்று மாலை அந்தந்த கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. தமிழக கோவில்களில் இருந்து திருட்டு போன 10 சிலைகள் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டன. அவற்றை கடந்த 1ம் தேதி தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் மத்திய அரசு ஒப்படைத்தது. அங்கிருந்து எடுத்து வரப்பட்ட மூன்று சிலைகளை கடந்த 6ம் தேதி கும்பகோணம் சிலை தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நீதிபதி சண்முகபிரியா முன் ஒப்படைத்தனர். அப்போது சிலைகளுக்கு தொடர்புடைய கோவில் அதிகாரிகள் சிலைகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மனு அளித்தனர்.அதன்படி அந்த சிலைகளை அந்தந்த கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நேற்று ஒப்படைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !