/
கோயில்கள் செய்திகள் / 200 இரட்டை மாட்டு வண்டியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள்
200 இரட்டை மாட்டு வண்டியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள்
ADDED :1254 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமியை தரிசனம் செய்ய திருச்சி மாவட்டம் அருகில் உள்ள காவல்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த சுமார் 1500 பக்தர்கள் சுமார் 200 இரட்டை மாட்டு வண்டியில் நேற்று இரவுகிளம்பி இன்று (11ம் தேதி) காலை ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தனர். பின் 12.06.2022 வடதிருகாவிரி என்று அழைக்கப்படும் கொள்ளிடம் ஆற்றில் மொட்டையடித்து பெருமாளுக்கு நேர்த்தி கடன் செலுத்தி பின்பு பெருமாளை தரிசிக்க உள்ளனர். நான்கு சக்கர வாகனங்கள் பெருகிவிட்ட இந்த காலத்தில் மாட்டு வண்டி பயணத்தை பொதுமக்களும் ,இன்றையை தலைமுறை குழந்தைகளும் காண்ட மகிழ்ந்தனர்.