வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
ADDED :1254 days ago
புதுச்சேரி : புதுச்சேரி அடுத்த வில்லியனூர் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவிலில் காலை தேரோட்டம் நடந்தது.
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. கவர்னர் தமிழிசை தேர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்தனர். தேரோட்டத்தில் முதல் அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், எதிர்க்கட்சித்தலைவர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.14ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.