கமுதி அருகே அரியநாச்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1252 days ago
கமுதி: கமுதி அருகே கே.பாப்பாங்குளம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம் தொடங்கி பூர்ணாஹூதி,கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம்,முதல், இரண்டாம் கால யாகபூஜை, தீபாராதனை நடந்தது.பின்பு யாகபூஜை,கோ பூஜை,நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி நடத்தப்பட்டு கருட வாகன புறப்பாட்டுக்கு பின் கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது. இதனை முன்னிட்டு விநாயகர் கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அரியநாச்சி அம்மன் அங்காள ஈஸ்வரி, தர்மமுனீஸ்வரர் 108 பால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. கிராமத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.கமுதி சுற்றியுள்ள மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.