உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் கோயில் திருவிழா

பெரியகுளம் கோயில் திருவிழா

பெரியகுளம்: பெரியகுளம் அருகே இ. புதுக்கோட்டை மண்டு கருப்பணசாமி, காளீஸ்வரி, விநாயகர் கோயில் திருவிழா மூன்று நாட்கள் நடந்தது. கரகம் எடுத்தல், முளைப்பாரி, பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், அக்கினிச்சட்டி எடுத்தல், கரகம் கரைத்தல், மஞ்சள் நீராட்டு விழா உட்பட நிகழ்ச்சிகள் நடந்து. மண்டு கருப்பணசுவாமி, காளீஸ்வரி, விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !