உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜக்கம்மாள் கோயில் கும்பாபிஷேகம்

ஜக்கம்மாள் கோயில் கும்பாபிஷேகம்

அலங்காநல்லுரர்: அழகாபுரியில் அருந்ததியர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஜக்கம்மாள், விநாயகர், மதுரைவீரன், பெருமாள், கருப்புச்சாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 2ம் கால யாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடாகின. ஸ்ரீதர் அர்ச்சகர் தலைமையில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். அம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !