உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி விசாகத்தை முன்னிட்டு பால்குடம் எடுத்த பக்தர்கள்

வைகாசி விசாகத்தை முன்னிட்டு பால்குடம் எடுத்த பக்தர்கள்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை விருதுநகர் ரோட்டில் உள்ள பழனியாண்டவர் கோயிலில் வைகாசி விசாகம் கொண்டாடப்பட்டது. பக்தர்கள் பால் குடங்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர். முருகனுக்கு பால், சந்தனம், இளநீர், மஞ்சள் அபிஷேகம் நடந்தது. முன்னதாக யாகங்கள் நடந்தது.

* அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ள சுப்பிரமணியர் சன்னதியில் சுப்பிரமணியருக்கு பாலபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !