மாகாளியம்மனுக்கு ஆடி பூச்சொறிதல் விழா
ADDED :4853 days ago
ஆண்டிபட்டி:நன்மை தருவார் கோயிலில் உள்ள 49 அடி உயர மாகாளியம்மனுக்கு ஆடி பூச்சொறிதல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்து கொடியேற்றினர். தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள், வழிபாடுகளுக்கு பின், ஆகஸட் 10 ல் வரும் ஆடி வெள்ளியில் தவசு, ஹோம பூஜைகள், கரகம் எடுத்து வந்து உலக நன்மைகள் வேண்டி அம்மனுக்கு பூச்சொறிதல் விழாவும், சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெறும். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.