உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செவல்பட்டி கோயிலில் பொங்கல் திருவிழா

செவல்பட்டி கோயிலில் பொங்கல் திருவிழா

திருவேங்கடம் : செவல்பட்டி கோயிலில் பொங்கல் திருவிழா நடந்தது. சங்கரன்கோவில் தாலுகா செவல்பட்டி (எ) பொட்டல்பட்டி  சந்தனமாரியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா இரண்டு நாட்கள் நடந்தது. முதல் நாள் காலை கரிவலம்வந்தநல்லூர்  பால்வண்ணநாத சுவாமி கோயில் முன்பிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோயில் சென்றடைந்தனர். மதியம்  அம்மனுக்கு பால் உட்பட பல்வேறு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு வில்லிசை, முளைப்பாரி, அக்னிசட்டி  திருவீதியுலா நடந்தது. பின் மேளதாள வாணவேடிக்கையுடன் அம்மன் சப்பரத்தில் திருவீதியுலா நடந்தது. இரண்டாம் நாள்  காலை திரளான பெண்கள் கோயிலில் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். மாலையில் முளைப்பாரி வழி அனுப்புதல், மஞ்சள்  நீராட்டு விழா ஆகியன நடந்தது. ஏற்பாடுகளை கோயில் விழாக் கமிட்டியார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !