உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூர் கோவிலில் பாதுகாப்பு அதிகரிப்பு

குருவாயூர் கோவிலில் பாதுகாப்பு அதிகரிப்பு

திருவனந்தபுரம் : புகழ் பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதால், பாதுகாப்பை அதிகரிக்குமாறு கேரள அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.கேரளாவின் குருவாயூரில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோவில் உலகப் புகழ் பெற்றது. இங்கு, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர். இக்கோவிலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக, மத்திய உளவுத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, குருவாயூர் கோவிலில் பாதுகாப்பை அதிகரிக்க, கேரள அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, கோவிலில் உள்ள புறக்காவல் நிலையத்தில் போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய பாது காப்பு படையினரும், இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.கோவிலைச் சுற்றிலும் 100 மீட்டர் இடத்தை கையகப்படுத்தி, உயரமான சுற்றுச் சுவர் கட்டவும், நுழைவாயில்களின் எண்ணிக்கையை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !