உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருந்து பிரசாதம் தரும் கோயிலில் அமைச்சர் ஷெல்ஜா தரிசனம்

மருந்து பிரசாதம் தரும் கோயிலில் அமைச்சர் ஷெல்ஜா தரிசனம்

கோட்டயம்: கேரள மாநிலம் கோட்டயம் அருகே, கூத்தாட்டுக்குளம் நெல்லிக்காட்டுமனா பகவதி கோயிலில் மத்திய அமைச்சர் ஷெல்ஜா தரிசனம் செய்தார். அவருக்கு மருந்து பிரசாதமாக வழங்கப்பட்டது. கண் மருத்துவ சிகிச்சைக்கான, கேரளாவின் முதல் ஆயுர்வேத மருத்துவமனையான ஸ்ரீதரீயம் கண் மருத்துவமனை, கூத்தாட்டுக்குளத்தில் உள்ளது. மருத்துவமனை நிர்வாகத்தினரின் நெல்லிக்காட்டுமனா பகவதி கோயில் சார்பில், நிர்வாகி ஹரி நம்பூதிரி வெளியிட்டுள்ள அறிக்கை: கேரளாவில் பிரபலமான இக்கோயிலில், ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் நோய் தீர்க்கும் மருந்து, பிரசாதமாக வழங்கப்படுகிறது. தினமலர் நாளிதழில், இக்கோயில் தொடர்பான செய்தி வெளியானதை தொடர்ந்து, தமிழகத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், அம்மனை தரிசித்து, மருந்து பிரசாதம் பெற்றுச்செல்கின்றனர். மத்திய அமைச்சர் ஷெல்ஜா நேற்று கோயிலில் தரிசனம் செய்தார். அவருக்கு கோயிலின் சிறப்பை நிர்வாகிகள் விளக்கினர். ஆக.,16 ம் தேதி வரை சிறப்பு பூஜைகளுடன், பக்தர்களுக்கு தோஷம் தீர்க்கும் மருந்து பிரசாதம் வழங்கப்படும். விபரங்களுக்கு 094478 75067ல் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் ஷெல்ஜா கூறுகையில்,""பிரார்த்தனையும், மருந்தும் இணைந்து நோய் தீர்க்கிறது. கோயிலின் வரலாறு நமது பண்பாட்டையும், கலாசாரத்தையும் பிரதிபலிப்பதாக உள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !